

சென்னை: கோல்டு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் வீடியோ பாடல் ‘தன்னே.. தன்னே..’ வெளியாகி உள்ளது. இந்த பாடலில் நடிகர் பிருத்விராஜ் படு மாஸாக நடனமாடி அசத்தியுள்ளார்.
நடிகர்கள் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ‘பிரேமம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் வெளிவர உள்ள அடுத்த படம் இது.
ராஜேஷ் முருகேசன் இசை அமைத்துள்ளார். தினேஷ் குமார் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
சுமார் 3.55 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ‘தன்னே.. தன்னே..’ பாடலில் அனைவரும் நிற்காமல் ஆடிக் கொண்டே உள்ளனர். இந்த பாட்டில் விக்ரம் பட புகழ் ஏஜென்ட் டீனாவும் வந்து சில நடன அசைவுகளை போட்டுவிட்டு செல்கிறார். அவர் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.