

இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தையும் தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தையும் மாறி,மாறி இயக்கி வருகிறார். இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பாடல் காட்சிக்காகப் படக்குழு நியூசிலாந்து சென்றுள்ளது. ஷங்கர், ராம் சரண், நாயகி கியாரா அத்வானி உட்பட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். அரசியல் த்ரில்லர் படமான இதன் பாடல் காட்சி படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரம் வரை அங்கு நடக்க இருக்கிறது.
இதற்கிடையே நியூசிலாந்தில் இருந்து நடிகை கியாரா அத்வானி, படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது வேகமாக பரவி வருகிறது.