

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ்கன், ஸ்ரேயா உட்பட பலர் நடித்த படம், ‘ஆர்ஆர்ஆர்’. சூப்பர் ஹிட்டான இந்தப் படம் இப்போது ஜப்பானிலும் வசூல் சாதனைப் படைத்து வருகிறது.
இந்தியா சார்பில் ‘செல்லோ ஷோ’ படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், பொதுப்பிரிவில் 'ஆர்ஆர்ஆர்' படமும் ஆஸ்கர் விருதுக்கு நேரடியாக கலந்து கொள்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோநகரில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜமவுலி, தானும் தனது தந்தை விஜயேந்திர பிரசாத்தும் அதற்கானப் பணிகளில்இறங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.