

வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, 3டியில் உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இதில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும், சீதையாக கீர்த்தி சனோனும் நடிக்கின்றனர். இந்திப் பட இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார்.
படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படம் வெளியானதால், ரிலீஸ் தேதி ஜனவரி 12ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான இதன் டீசர், கடும் விமர்சனத்துக்குள்ளானது. கிராபிக்ஸ் சரியாகக் கையாளப்படவில்லை என்றும் ராமரை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஜூன் 16-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “முழுமையான காட்சி அனுபவத்தைக் கொடுக்க, டெக்னீஷியன்களுக்கு அதிக நேரம் வேண்டி இருப்பதால், 2023 ம் ஆண்டு ஜூன் 16 அன்று படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.