“இது புனித் ராஜ்குமாரின் கனவு” - ‘கந்தாட குடி’ படத்தின் டிக்கெட் விலை குறைப்பு

“இது புனித் ராஜ்குமாரின் கனவு” - ‘கந்தாட குடி’ படத்தின் டிக்கெட் விலை குறைப்பு
Updated on
1 min read

புனித் ராஜ்குமாரின் இறுதிப் படமான ‘கந்தாட குடி’ (Gandhada Gudi) படத்திற்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கந்தாட குடி’ (Gandhada Gudi). கர்நாடகத்தின் வனப்பகுதிகளையும், அதன் அழகையும் காட்சிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தை புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வின் புனித்ராஜ்குமார் தயாரித்திருந்தார். இதனை அமோகவர்ஷா இயக்கியிருந்தார். இந்த ஆவணப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதாக புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வின் புனித்ராஜ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கர்நாடகம் முழுவதும் திங்கள் முதல் வியாழன் வரை அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விலை குறைக்கப்படும். குழந்தைகள் முன்வந்து இந்த ஆவணப்படத்தை அதிகமாக பார்க்க வேண்டும் என்பது புனித்தின் கனவு. அதன்காரணமாகத்தான் விலை குறைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சாதாரண திரையரங்குகளில் படத்தின் டிக்கெட் விலை ரூ.56 ஆகவும், மல்டிப்ளக்ஸ் திரைகளில் டிக்கெட் விலை ரூ.112 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் உணர்ச்சிவசத்துடன் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in