

பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி. இவர் தமிழில் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது சந்தானம் நடிக்கும் ‘கிக்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அடுத்து ஷங்கர் கோமனஹள்ளி இயக்கும் கன்னடப் படத்தில் மனநல பிரச்னை கொண்டவராக நடிக்க இருக்கிறார்.
இதில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, “ஹாரர் கதையை கொண்ட படம் இது. கண்கள் மற்றும் உடல் மொழி மூலம் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் சவாலான கேரக்டர். வசனங்கள் அதிகம் இல்லை. மன நலப் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதை என்றாலும் ஒரு மோசடியை பற்றி படம் பேசும்” என்றார்.