

தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனா, அமலா தம்பதியின ரின் மகனும் நடிகருமான அக்கிநேனி அகிலுக்கு வரும் டிசம்பர் 9-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
தெலுங்கு திரைப்பட உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும் நடிகர் நாகார்ஜுனா, நடிகை அமலா தம்பதியினரின் மகனுமான அக்கிநேனி தனது சிறு வயது நண்பரான சிரியா பூபாலை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதலுக்கு இருவரது வீட்டாரும் அண்மையில் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அகிலுக்கும், சிரியா பூபாலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி வரும் டிசம்பர் 9-ம் தேதி ஹைதரா பாத்தில் உள்ள ஜிவிகே ஹவுஸில் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெறவுள்ளது. சிரியா பூபால் பேஷன் டிசைனராக பணியாற்றி உள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜிவிகே பூபாலின் மகளாவார். நாகார் ஜுனாவின் மற்றொரு மகனான நாக சைதன்யா, நடிகை சமந்தா திருமணமும் விரைவில் நடைபெற வுள்ளது குறிப்பிடத்தக்கது.