நடிகை பூர்ணா திருமணம்

நடிகை பூர்ணா திருமணம்
Updated on
1 min read

தமிழில், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’, ‘தகராறு’, ‘சவரக்கத்தி’, ‘தலைவி’ உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பூர்ணா. இவர் ஷாம்னா காசிம் என்ற தனது நிஜப் பெயரில் மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.

இவருக்கும் துபாயில் வசிக்கும் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தனக்கும் ஆசிப் அலிக்கும், ஜூன் 12-ம் தேதி திருமணம் நடந்துவிட்டதாக பூர்ணா இப்போது தெரிவித்துள்ளார். துபாயில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்தது என்றும் தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in