

தமிழில் ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை அனு இம்மானுவேல். அடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் அவர் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இப்போது தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வரும் அவர், நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரீஷை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அதை மறுத்துள்ள அனு இம்மானுவேல், “நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை அனு இம்மானுவேல், அல்லு சிரீஷுடன், ‘ஊர்வசிவோ ராக்சஷிவோ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.