

சுகுமார் இயக்கத்தில் உருவான பான் இந்தியா படம், ‘புஷ்பா’. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உட்பட பலர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். பான் இந்தியா முறையில் வெளியான இதில், சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அந்தப் பாடல் வரவேற்பைப் பெற்றது. வட இந்தியாவிலும் இந்தப் படம் வசூல் அள்ளியது. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. முதல் பாகத்தில் சமந்தா ஆடியதை போல ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறது. அதில் இந்தி நடிகை மலைகா அரோரா ஆட இருப்பதாக செய்திகள் வெளியானது. இப்போது, தமன்னா ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.