வாழ்க்கை எளிமையானது; பயத்தால் சிக்கலாக்குகிறோம்! - சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்

வாழ்க்கை எளிமையானது; பயத்தால் சிக்கலாக்குகிறோம்! - சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்
Updated on
1 min read

தமிழில், ‘இந்தியன் 2’, ‘அயலான்’ படங்களில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரைக் காதலித்து வருகிறார். நடிகர், நடிகைகள் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருக்கும் நிலையில் இவர்கள் வெளிப்படையாக அறிவித்தனர்.

இந்நிலையில், ரகுல் அளித்த பேட்டியில், பிரபலங்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த தயங்குவது ஏன்? என்பதற்குப் பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது: தங்கள் வேலையில் இருந்து கவனம் சிதறிவிடும் என்பதால் தங்கள் காதல் வாழ்க்கையை பலர் பேசுவதில்லை என்று நினைக்கிறேன். கேமரா முன்பு நடிக்கிறேன். மீதமிருக்கும் நேரங்களில் நான், நானாக இருக்க விரும்புகிறேன்.

எல்லோருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், துணை என ஒருவர் இருப்பது இயல்பானது. நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. மனிதர்கள் வேலை இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், துணை இல்லாமல் இல்லை. எனக்கும் ஜாக்கிக்கும், பார்ட்னருக்கு சரியான மரியாதையை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நாங்கள் பிசியாக இருக்கிறோம். காதலை வெளியே தெரிவித்துவிட்டதால், எங்கள் காதல் வாழ்க்கைப் பற்றிய மற்றவர்களின் யூகங்களை, அது எளிதாக மாற்றிவிடுகிறது. வாழ்க்கை மிகவும் எளிமையானது. அதை பயத்தின் காரணமாகவே சிக்கலாக்குகிறோம். நான் அந்தப் பயத்துடன் செயல்படவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in