

இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்றுள்ள இந்து மதத்தின் சித்தரிப்பு குறித்து பேசினார்.அப்போது அவர், ''பலரும் இந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். அப்படியல்ல; இன்றைய காலக்கட்டத்தில் தான் அது மதம். ஆனால், இந்து மதத்திற்கு முன்பு அது 'இந்து தர்மமாக' இருந்தது.
இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை; அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் இந்து அல்ல. அதே சமயம் 'இந்து தர்மம்' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர இந்து தான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் இந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.