Published : 09 Oct 2022 10:33 AM
Last Updated : 09 Oct 2022 10:33 AM

மோகன் ராஜா இயக்கத்தில் நாகார்ஜுனா?

இயக்குநர் மோகன்ராஜா, சிரஞ்சீவி நடிப்பில் ‘காட்ஃபாதர்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா, சத்யதேவ், தன்யா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், இந்தி நடிகர் சல்மான் கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

கடந்த 5ம் தேதி வெளியான, இந்த திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மலையாளத்தில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் ரீமேக். இந்தப் படத்தை அடுத்து, நாகார்ஜுனா நடிக்கும் படத்தை மோகன் ராஜா இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது. ‘காட்ஃபாதர்’ படம் தொடங்குவதற்கு முன்பே, நாகார்ஜுனாவிடம் அவர் கதை சொன்னதாகவும் அது பிடித்துப் போனதால், அவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x