மாஸ் லுக்கில் சிரஞ்சீவி, மிரட்டும் நயன்தாரா... - ‘காட்ஃபாதர்’ ட்ரெய்லர் எப்படி?

மாஸ் லுக்கில் சிரஞ்சீவி, மிரட்டும் நயன்தாரா... - ‘காட்ஃபாதர்’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'காட்ஃபாதர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படம் 'காட்ஃபாதர்'. மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் சல்மான் கான், சமூத்திரகனி, பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - பலமான அரசியல் பின்னணியில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் தெறிக்கும் வகையில் முழு ட்ரெய்லரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்பீரமான நயன்தாராவின் ஸ்கீரின் ப்ரசன்ஸ், சிரஞ்சீவியின் லுக்குக்கு இணையான காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் நடையும், லுக்கும் திரையை தெறிக்கவிடுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. விஎஃப்எக்ஸ் காட்சிகள் பிசுபிசுப்பதை ட்ரெய்லரில் உணரமுடிகிறது. சல்மான் கான், சிரஞ்சீவி நடந்துவரும் இறுதிக் காட்சியின் மூலம் முழுக்க முழுக்க மாஸ் என்டர்டெயின்மெண்ட் பேக்கேஜாக 'காட்ஃபாதர்' படத்தை மோகன்ராஜா இயக்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in