Published : 25 Sep 2022 06:47 AM
Last Updated : 25 Sep 2022 06:47 AM

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது வழக்கு

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. ‘22 பீமேல் கோட்டயம்’, ‘உஸ்தாத் ஓட்டல்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘வைரஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், நாயகனாக நடித்துள்ள ‘சட்டம்பி’ படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் தொடர்பாக, பிரபலமான மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். பெண் பத்திரிகையாளர் பேட்டி எடுத்தார்.

அப்போது, ஒரு கேள்வியால் எரிச்சலடைந்த அவர், கேமராவை நிறுத்தும்படி கூறிவிட்டு, பெண் பத்திரிகையாளரையும் அந்தக் குழுவையும் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி மராடு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகாருக்கு பதிலளித்துள்ள ஸ்ரீநாத் பாசி, ‘‘ஒவ்வொருவரும் அவமானப்படுத்தப்படும் போது என்ன செய்வார்களோ, அப்படித்தான் பதிலளித்தேன். வேறு எந்த தவறும் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x