தென்னிந்திய சினிமா
‘புஷ்பா 2’ படத்தில் மலைகா அரோரா?
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அந்தப் பாடல் பலத்த வரவேற்பைப் பெற்றது. சுகுமார் இயக்கி இருந்த இந்தப் படம் வட இந்தியாவிலும் அதிக வசூலை அள்ளியது.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தில் சமந்தா ஆடியதை போல ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறது. அதில் இந்தி நடிகை மலைகா அரோராவை ஆட வைக்க, முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
