மகேஷ் பாபு படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் ஸ்ருதி

மகேஷ் பாபு படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் ஸ்ருதி
Updated on
1 min read

மகேஷ்பாபு, தமன்னா நடித்து கொண்டிருக்கும் ’அகாடு’ என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆட ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸ்ருதி இப்படி ஒரு பாடலுக்கு மட்டும் ஒப்பந்தமாகியுள்ளது, அதுவும் தனக்கு போட்டியாக இருக்கும் தமன்னா நடிக்கும் படத்தில் நடனமாடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

தமன் இசையமைக்கும் அகாடு படத்தில் ஸ்ருதிஹாசன் நடனத்திற்காகவே அருமையான ஒரு டியூனை அமைத்திருக்கிறாராம். இந்த படத்தை ஸ்ரீனு வைத்லா இயக்குகிறார்.

உலக நாயகன் கமல் ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் இப்படி ஒரு பாடலுக்கு நடனமாடி சோலோ டான்சராகவும் மாறியிருப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இதற்காக கணிசமான தொகையை அவருக்கு வழங்க 14 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

அகாடு படம் குறித்து அவ்வப்போது இது போன்ற தகவல்கள் வெளியாவதால், அந்த படத்தின் டீசருக்கும் பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in