

தமிழில், 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், தீதும் நன்றும் படங்களில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அந்தப் படத்துக்காக அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இப்போது 'நித்தம் ஒரு வானம்’ படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவது:
உருவக் கேலியை தாங்கும் தன்னம்பிக்கையை பெற்றிருக்கிறேன். நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால், முதலில் வருத்தமாக இருந்தது. இப்போது கண்டுகொள்வதில்லை. எடை கூடுவதற்கு உடல் பிரச்சினைகளும் காரணமாக இருக்கிறது. நான் எப்படி இருக்கிறேனோ அப்படி ஏற்றுக்கொண்டு நடிக்க அழைப்பவர்கள் ஏராளம். ஒல்லியான நடிகைகளை மட்டுமே நாயகியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது புரியவில்லை.
நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோரின் பிரபலத்திற்கும் தோற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை. திறமைதான் முக்கியம். ஆனால், நடிகைகள் என்று வரும்போது உடல் தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இல்லை என்றால், அம்மாவாக நடிக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.