

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் உட்பட பலர் நடித்த பான் இந்தியா படம், ‘லைகர்’. புரி ஜெகநாத் இயக்கி இருந்தார். அவருடன் இணைந்து நடிகை சார்மி படத்தைத் தயாரித்திருந்தார். இந்திப் பதிப்பை கரண் ஜோஹர் தயாரித்திருந்தார். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கில் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது.
படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் நடிகை சார்மியிடமும் புரி ஜெகநாத்திடமும் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். அவர்களைச் சந்திக்க மறுத்துள்ள சார்மி, தனக்கும் கடுமையான பண இழப்பு என்பதால், நஷ்ட ஈடு தர வாய்ப்பில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து விநியோகஸ்தர்கள், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையில் முறையிட இருப்பதாகக் கூறப்படுகிறது.