

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக அறிமுகமான படம், ‘3’. தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் நடித்திருந்தனர். 2012ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மூலமாகத்தான் அனிருத் இசை அமைப்பாளர் ஆனார். இதில் இடம்பெற்ற, ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் சூப்பர் ஹிட்டானது.
இதன் தெலுங்கு பதிப்பு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று முன்தினம் மறு வெளியீடு செய்யப்பட்டு வசூல் குவித்து வருகிறது. இது தெலுங்கு திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ‘வாத்தி’ படத்தின் வியாபாரத் துக்கு இந்த வெற்றி உதவும் என்கிறார்கள்.