

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அப்பா', மலையாளத்தில் ரீமேக்காக இருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கவிருக்கிறார்.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அப்பா'. சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார். ஜூலை 1ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
குறைந்த முதலீட்டில் சமுத்திரக்கனி உருவாக்கிய இப்படம், அவருக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. 'அப்பா' வெளியீட்டின் போதே பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமுத்திரக்கனி தெரிவித்தார்.
இந்நிலையில், 'அப்பா' முதன் முதலாக மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கவிருக்கும் இப்படத்தில் ஜெயராம், ஆஷா ஷரத் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைத்தும் முடிவானவுடன், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.