

மும்பை திரைப்பட விழாவில், அக்டோபர் 22-ம் தேதியன்று 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, மும்பை திரைப்பட விழாவில் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 22 அன்று வெளியாக உள்ளது. இதில் ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பாகுபலி நடிகர்கள் கலந்துகொண்டு, பட உருவாக்கம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
மேலும் 'பாகுபலி 2' படத்தின் டீஸரும் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, ''அனைத்து ரசிகர்களுடனும் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதை மும்பை திரைப்பட விழாவில் வெளியிடுவது இன்னும் குதூகலமாக இருக்கப்போகிறது. ஏனெனில் அப்போது படத்தின் மொத்தக் குழுவினரும் என்னுடன் இருக்கப் போகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.
ஜியோ மாமி 18-வது மும்பை திரைப்பட விழா, அக்டோபர் 20 முதல் 27 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.