

'கத்தி' ரீமேக்கான 'கைதி நம்பர் 150'யில் லாரன்ஸ் நடன இயக்கத்தில் சீரஞ்சிவியுடன் நடனமாடி இருக்கிறார் லட்சுமி ராய்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழிலில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கத்தி'. அனிருத் இசையமைத்த இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு பல இளம் முன்னணி நடிகர்கள் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானாலும் இறுதியில் சிரஞ்சீவியின் 150வது படமாக 'கத்தி' ரீமேக் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. வி.வி.வினாயக் இயக்குநராக ஒப்பந்தமானார். சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று 'கைதி நம்பர் 150' என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தது படக்குழு.
2017-ஆம் ஆண்டு பொங்கலுக்கு 'கைதி நம்பர் 150' வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட கத்ரீன் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்பாடலுக்கு லாரன்ஸ் நடனம் இயக்க ஒப்பந்தமானார். அப்பாடல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடால், லட்சுமி ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டு பாடல் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.