

10-ம் வகுப்பு மாணவி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் யேசுதாஸ் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'க்ளாஸ்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
நட்பை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் மலையாள படத்தை இயக்குகிறார் சின்மயி நாயர். கேரளாவைச் சேர்ந்த இவர், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 'க்ளாஸ்' என்ற பெயரில் உருவாக உள்ள இப்படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சபு குருவிலா மற்றும் பிரகாஷ் குருவிலா தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு பென்னி ஜோசஃப் ஒளிப்பதிவு செய்ய மனு ஷஜு படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.ஆர்.சுராஜ் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு அனில் ராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் விஜய் யேசுதாஸுடன் சுதீர், மீனாட்சி உள்ளிட்டோரும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.