‘‘பாலிவுட் வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன்’’ - கீர்த்தி ஷெட்டி

‘‘பாலிவுட் வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன்’’ - கீர்த்தி ஷெட்டி
Updated on
1 min read

'எனக்கு வந்த பாலிவுட் வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன். தமிழ், தெலுங்கில் சிறந்த கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன்' என நடிகை கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

'உப்பென்னா' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. லிங்குசாமியின் 'தி வாரியர்' படத்தின் மூம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதேபோல, சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நாயகியாக நடிக்கிறார். தவிர, வெங்கட்பிரபு இயக்கத்தில் பைலிங்குவல் உருவாகி வரும் படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில், 'மச்சர்லா நியோஜாகவர்கம்' ( Macharla Niyojakavargam) என்ற தெலுங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய கீர்த்தி ஷெட்டி, ''என் முதல் தெலுங்கு படமான ’உப்பென்னா’வில் விஜய் சேதுபதி போன்ற பன்முகத்திறமை கொண்ட நடிகருடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. அதில் என் கேரக்டரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு படத்தையும் என் கேரக்டர் பிடித்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்.

இந்தப் படமும் அப்படித்தான். ’தி வாரியர்’ படம் பற்றி கேட்கிறார்கள். சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சஜகம்தான். அதை ஓர் அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன். எனக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்தன. நிராகரித்துவிட்டேன். தமிழ், தெலுங்கில் சிறந்த கதைகளில் நடிப்பதை விரும்புகிறேன்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in