

நடிகர் கிச்சா சுதீப் நடித்துள்ள ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படம் வெளியான முதல் 5 நாட்களில் சுமார் 110 கோடி ரூபாயை உலக முழுவதும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனுக்கான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ஆறு கோடி ரூபாயை நெருங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 28-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியானது இந்தப் படம். ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைத்து தரைப்பிலும் ஓரளவு பாசிட்டிவான ரியாக்ஷனை இந்த படம் பெற்றுள்ளது. கன்னட மொழி மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்தப் படம் தரமான வசூலை ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபான்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் ஜானரில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் 'விக்ராந்த் ரோணா'. அனுப் பண்டாரி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். நடிகர் கிச்சா சுதீப் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்து, நடித்துள்ளார். நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் திரைப்பட வர்த்தகத்தை கூர்ந்து கவனித்து வரும் வல்லுநர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தில் வசூல் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளனர். அவற்றில் சில…