

பிரபல கதாநாயகி நித்யா மேனன், மலையாள நடிகரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழில் ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’, ‘24’, ‘இருமுகன்’, ‘மெர்சல்’, ‘சைக்கோ’உட்பட பல படங்களில் நடித்துள்ள நித்யாமேனன், இப்போது தனுஷுடன் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் அவர் நடித்துள்ள ‘ஆறாம் திருகல்பனா’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இதன் பிறகு, புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நித்யாமேனன், பிரபல மலையாள கதாநாயகன் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள் ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக நித்யா மேனன் எதுவும் தெரிவிக்கவில்லை.