ஃபஹத் பாசில் நடிப்பு, ரஹ்மான் இசை... கவனம் ஈர்க்கும் 'மலையன்குஞ்சு' ட்ரெய்லர்

ஃபஹத் பாசில் நடிப்பு, ரஹ்மான் இசை... கவனம் ஈர்க்கும் 'மலையன்குஞ்சு' ட்ரெய்லர்
Updated on
1 min read

ஃபஹத் பாசில் நடிக்கும் 'மலையன்குஞ்சு' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியான 'விக்ரம்' படத்திற்கு பிறகு மீண்டும் மலையாள தேசத்துக்கு திரும்பியிருக்கிறார் ஃபஹத் பாசில். இயக்குநர் சஜிமோன் இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடிக்கும் திரைப்படம் 'மலையன்குஞ்சு'. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு செய்கிறார் 'மாலிக்' பட இயக்குநர் மகேஷ் நாராயணன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ராஜிஷா விஜயன், இன்தரன்ஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஃபகத் பாசிலின், ஃபகத் பாசில் அண்ட் ஃபிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மலையன்குஞ்சு' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லரை பொறுத்தவரை, கிணற்றில் நீரிறைத்துக்கு கொண்டு குளித்துக்கொண்டிருக்கிறார் ஃபஹத். பக்கத்துவீட்டு குழந்தை கத்துவதை கேட்டு எரிச்சலடைந்து சண்டைக்கு செல்கிறார். அடுத்தக் காட்சியிலும், 'நீயும் உன் தங்கச்சியும் இப்படிதான் சின்னவயசுல அழுதீங்க' என அவர் அம்மா கூறுகிறார்.

அடுத்த சில காட்சிகளுக்கு பிறகும் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. ஆக, ஒரு குழந்தையை மையமாக வைத்து கதை நடப்பதை உணர முடிகிறது. இறுதியில் 'பொன்னி' என நிலச்சரிவில் சிக்கிக்கொண்டு கத்துகிறார். 'பொன்னி' என்ற குழந்தையை மீட்க போராடும் கதையாக ‘மலையன் குஞ்சு' படம் இருக்கும் என தெரிகிறது. நிலச்சரிவுக்குள் சிக்கிக்கொள்ளும் காட்சியின் ஒளிப்பதிவு கவனிக்கவைக்கிறது. தவிர, அதில் சிக்கியிருக்கும் பஹத்தின் நடிப்பில் ட்ரெய்லரிலேயே மிரட்டும்போது படத்தில் சும்மாவிடவாப்போகிறது.. ஜூலை 22-ம் தேதி வெளியாகும் படத்தின் எதிர்பார்ப்பை ட்ரெய்லர் கூட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in