‘ராம், உங்களுக்கு யாருமில்லையா?’ - வெளியானது துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ டீசர்

‘ராம், உங்களுக்கு யாருமில்லையா?’ - வெளியானது துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ டீசர்
Updated on
1 min read

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'சீதா ராமம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான், நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் அவர் ராணுவ அதிகாரியாக, ராம் என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இதில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா காஷ்மீரைச் சேர்ந்த ஆஃப்ரீன் என்ற பெண்ணாக நடிக்கிறார். வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். அண்மையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டீசரைப் பொறுத்தவரை ராஷ்மிகா மந்தன்னா ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். அதில் ஒரு ஃப்ரேமில் கூட அவர் காட்டப்படவில்லை. அதேசமயம், ராணுவ வீரராக காட்டப்படும் துல்கர் சல்மான் க்ளின் ஷேவிங்கில் க்யூட்டாக இருக்கிறார். முழு டீசரையும் ஆக்கிரமித்துள்ள அவரின் ஃப்ரேம்களுக்கு நடுவே ஓரிரு ஃப்ரேம்களில் வந்து செல்கிறார் மிருணாள் தாக்கூர். ஆகஸ்ட் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in