Last Updated : 21 May, 2016 07:21 PM

 

Published : 21 May 2016 07:21 PM
Last Updated : 21 May 2016 07:21 PM

கத்தி ரீமேக்கில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை

தெலுங்கில் உருவாகும் 'கத்தி' ரீமேக்கில் சமந்தா வேடத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கத்தி'. அனிருத் இசையமைத்த இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. 2014-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ரீமேக்காக இருக்கிறது 'கத்தி'. இரண்டையுமே லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க அவருடைய 150 வது படமாக உருவாகிறது 'கத்தி'. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் உடன் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது லைக்கா நிறுவனம். வி.வி.விநாயக் இயக்க இருக்கிறார்.

சமந்தா வேடத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. 'பாகுபலி 2' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. சீரஞ்சிவியின் 150வது படம் என்பதால் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று முயற்சியில் எப்போது படப்பிடிப்பு என்று கேட்டிருக்கிறார் அனுஷ்கா. தற்போது படக்குழு படப்பிடிப்பு தேதிகளை இறுதி செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x