Published : 29 May 2022 11:02 PM
Last Updated : 29 May 2022 11:02 PM
சென்னை: தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என சகலமும் கலந்த மசாலா திரைப்படம் இது என தெரிகிறது.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் (மறைந்த) விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மொசலோ மொசலு' மற்றும் 'வாடி வாசல்' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
3.34 நிமிடங்கள் இந்த படத்தின் ட்ரெய்லர் நீள்கிறது. இதில் லெஜெண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT