

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கொடவா சமுதாய முறைப்படி தனது தோழிகளுடன் சேலை அணிந்திருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ’நேஷனல் கிரஷ்’ என்று அழைக்கப்படும் அவரது பூர்விகம், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம். ராஷ்மிகாவின் பால்ய தோழி ஒருவருக்கு குடகில் சமீபத்தில் திருமணம் நடந்தது. படங்களில் பிஸியாக இருந்தாலும், தோழியின் திருமணத்தில் கலந்துகொண்டார் ராஷ்மிகா. அப்போது அவர், கொடவா சமுதாய முறைப்படி தோழிகளுடன் சேலை கட்டி இருந்தார்.
தோழிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா நடித்து கடைசியாக வெளிவந்த புஷ்பா திரைப்படத்திற்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ராஷ்மிகா தற்போது வம்சி இயக்கத்தில் விஜயின் #Thalapathy66 -ல் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.