விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் 'குஷி' - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் 

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் 'குஷி' - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் 
Updated on
1 min read

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் 'குஷி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர். 'குஷி' உற்சாகமான, வண்ணமயமான காதல் கதையாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் உணர்த்துகிறது. மேலும், முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

'குஷி' தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in