Published : 15 May 2022 12:04 PM
Last Updated : 15 May 2022 12:04 PM

பிரபாஸூடன் இணையும் ராஷ்மிகா மந்தனா

பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படம் அண்மையில் வெளியானது. இதையடுத்து அவரது நடிப்பில், 'சலார்' 'ஆதி புருஷ்' ஆகிய படங்கள் விரைவில் திரைக்க வர உள்ளன. இதைத் தொடர்ந்து 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்கா இயக்கத்தில் புதிய படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

இந்த படம் அவரது 25-வது படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தினை பிரபாஸின் ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களைத் தயாரித்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x