’அகிலம் நீ..’- அன்னையர் தினத்தையொட்டி வெளியான 'கேஜிஎஃப்-2' வீடியோ பாடல்

’அகிலம் நீ..’- அன்னையர் தினத்தையொட்டி வெளியான 'கேஜிஎஃப்-2' வீடியோ பாடல்
Updated on
1 min read

அன்னையர் தினத்தையொட்டி கேஜிஎஃப்-2 படத்தின், 'அகிலம் நீ' என்ற தாய் பாசத்தை பறைசாற்றும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வெளியான படம் 'கேஜிஎஃப்'. இப்படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

வசூல் ரீதியாக ரூ.1000 கோடியைக்கடந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி, இன்று 'கேஜிஎஃப்-2' படத்தின் 'அகிலம் நீ, முகிலும், நீ சிகரம் நீ' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மகன் யஷ்-ஷூக்காக தாய் பாடும் இந்த பாடலின் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் அன்னையர் தினத்தையொட்டி ஷேர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in