பலகோடி மதிப்பிலான பான் மசாலா விளம்பரம் - நடிக்க மறுத்த யஷ்

பலகோடி மதிப்பிலான பான் மசாலா விளம்பரம் - நடிக்க மறுத்த யஷ்

Published on

பலகோடி ரூபாய் மதிப்பிலான பான் மசாலா விளம்பரம் ஒன்றில் நடிகர் யஷ் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் திரைப்படம் மூலம் நாடு கடந்து பிரபலமடைந்தவர் கன்னட நடிகர் யஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், யஷ் தனக்கு தேடி ந்த பான் மசாலா விளம்பர வாய்ப்பை புறக்கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரசிகர்களை தவறாக ஒருபோதும் வழிநடத்தக்கூடாது என்பதால், பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடிகர் யஷ்ஷின் விளம்பர வாய்ப்புகளை நிர்வகிக்கும் அர்ஜூன் பானர்ஜி என்பவர் கூறுகையில், ''அண்மையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் யஷ். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். அவர் ரசிகர்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். சரியான தகவல்களை ரசிகர்களிடம் கொண்டு செல்லவேண்டும் என நினைப்பவர் யஷ்'' என தெரிவித்துள்ளார். அதேபோல, பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்கு கடந்த வாரம் நடிகர் அக்‌ஷய்குமார் வருத்தம் தெரிவித்திருந்ததும், புகையில விளம்பரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க மறுத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in