'ராதே ஷ்யாம்' கலவையான விமர்சனம் - தற்கொலை செய்துகொண்ட பிரபாஸ் ரசிகர்

'ராதே ஷ்யாம்' கலவையான விமர்சனம் - தற்கொலை செய்துகொண்ட பிரபாஸ் ரசிகர்
Updated on
1 min read

பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்துக்கு எழுந்த கலவையான விமர்சனம் காரணமாக அவரினர் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களுடன் வெளியாகியுள்ள இப்படம், தெலுங்கை தாண்டி பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் கலவையான விமர்சனம் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்த முத்யாலா ரவி தேஜா (24) என்பவர் தான் படத்தின் கலவையான விமர்சனத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெல்டிங் தொழிலாளியான இவர் ராதே ஷ்யாம் படத்தை பார்க்க ஆவலாக இருந்தாராம்.

அதன்படி, ரிலீஸ் தினத்தன்று படத்தைப் பார்த்திருக்கிறார். படம் முடிந்த பிறகு, படத்துக்கு வெளிவந்த கலவையான விமர்சனங்கள் குறித்து தனது தாயிடமும், நண்பரிடமும் வருத்தம் தெரிவித்து கவலையாக இருந்துள்ளார். இதையடுத்து தான் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி அவரது நண்பர்களையும் மற்ற பிரபாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in