சமந்தா நடிக்கும் ‘சகுந்தலம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சமந்தா நடிக்கும் ‘சகுந்தலம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

சமந்தா நடிக்கும் ‘சகுந்தலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகம் ‘அபிஜன ஷகுந்தலம்’. இதில் சகுந்தலம் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் குணசேகர் புராணத் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். குணா டீம் வொர்க்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. கடந்த ஆண்டே இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிவிட்டாலும் கரோனா அச்சுறுத்தலால் இப்படத்துக்கான பணிகள் தொடங்கப்படாமலே இருந்தன. முதலில் இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக செய்திகள் வந்தன. அதன் பிறகு சமந்தா இப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது ‘சகுந்தலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. குணசேகர் எழுதி இயக்குகும் இப்படத்துக்கு மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா இப்படத்தில் அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in