‘உப்பெனா’ வெளியாகி ஓராண்டு நிறைவு - கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சிப் பதிவு

‘உப்பெனா’ வெளியாகி ஓராண்டு நிறைவு - கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சிப் பதிவு
Updated on
1 min read

‘உப்பெனா’ வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நடிகை கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விட்டார். சமீபத்தில் நானியுடன் அவர் நடித்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ பெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் ‘உப்பெனா’ படம் வெளியாகி இன்றுடன் (பிப்.12) ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு கீர்த்தி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘உப்பெனா’ வெளியாகி ஓராண்டு. ஒருவேளை நமக்கு இரண்டு பிறந்தநாட்கள் இருந்து அதில் நாம் ஒன்றை தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பிருந்தால் அதற்கு நான் இந்த நாளைதான் தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் இன்றுதான் என் வாழ்க்கை தொடங்கியது. நிபந்தனையின்றி என் மீது அன்பு பொழியப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. திரைத்துறை என்னை அன்புடன் ஏற்றுக் கொண்டு ஓராண்டாகிறது.

இவ்வாறு கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in