

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் 'லைகர்' படத்தின் டிஜிட்டல் உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் படம் 'லைகர்'. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இந்திய சினிமாவில் முதல் முறையாக இப்படத்தில் மைக் டைசன் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் அவருக்கு கவுரவ வேடம் என்றும், படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டைசன் தொடர்பான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கிவிட்டு சமீபத்தில் ‘லைகர்’ படக்குழு சமீபத்தில் இந்தியா திரும்பியது. இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் ‘லைகர்’ படத்தின் வெளியீட்டு உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.