முதலில் விவாகரத்து கோரியது சமந்தாவா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜுனா 

முதலில் விவாகரத்து கோரியது சமந்தாவா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜுனா 
Updated on
1 min read

நாகசைதன்யா - சமந்தா பிரிவு குறித்து தான் கூறியதாக வந்த செய்தி தவறானது என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகளின் நட்பு காதலில் முடிந்தது என அறிவித்த இருவரும், சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால், திடீரென இருவரும், ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல, பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டுஅக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம்அறிவித்ததைக் கண்டு தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகமே அதிர்ச்சியுற்றது.

இவர்களது பிரிவுக்குp பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என யாரும் கூறவில்லை. இதுகுறித்து பல சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரவர்களுக்கு தெரிந்த, தகவல்களைக் கூறி வந்தனர்.

இந்நிலையில் நாகசைதன்யா - சமந்தா பிரிவு குறித்து நாகார்ஜுனா கூறியதாக ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியானது. அதில் சமந்தாதான் முதலில் விவாகரத்து கோரினார் என்று நாகார்ஜுனா கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த செய்தி தொடர்பாக தற்போது நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

சமூக ஊடகங்களிலும் டிஜிட்டல் ஊடகங்களிலும் நாகசைதன்யா - சமந்தா குறித்து நான் கூறியதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் முட்டாள்த்தனமானது. வதந்திகளை செய்திகளாக வெளியிட வேண்டாம் என்று மீடியா நண்பர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நாகார்ஜுனா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in