மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம் - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம் - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் முதல்முறையாக அவர் நடித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து வெளியான படம் ‘யுவரத்னா’. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்துள்ள படம் ஒன்றை சேத்தன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ‘ஜேம்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முதல்முறையாக புனித் ராஜ்குமார் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். நேற்று (ஜன 26) குடியரசு தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in