

'தூள்' படத்தில் வில்லியாக நடித்த தெலுங்கானா சகுந்தலா மாரடைப்பால் ஜுன்13ம் தேதி காலமானார்.
2003ம் ஆண்டு விக்ரம், ஜோதிகா, ரீமாசென் நடிப்பில் வெளியான 'தூள்' படம் மூலம் தமிழில் வில்லியாக அறிமுகமானவர் தெலுங்கானா சகுந்தலா. இப்படத்தில் ’சொர்ணாக்கா’ என்னும் வேடத்தில் நடித்ததால் தமிழக ரசிகர்கள் அவரை சொர்ணாக்கா என்றே அழைக்க ஆரம்பித்தார்கள்.
பல்வேறு தெலுங்கு படத்தில் நடித்திருந்தாலும், தமிழில் 'தூள்', 'சிவகாசி', 'மச்சக்காளை' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தெலுங்கானா சகுந்தாலா என்று அழைக்கப்படும் இவர் ஜுன் 13ம் தேதி இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.