யூடியூபில் சாதனை படைத்த ‘புஷ்பா’ டீஸர்

யூடியூபில் சாதனை படைத்த ‘புஷ்பா’ டீஸர்

Published on

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா' படத்தின் டீஸர் யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ளார்கள். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாகப் படக்குழு வெளியிட்டு வருகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ‘புஷ்பா’ படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த டீஸர் இதுவரை 8 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த டீஸர் 20 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான டீஸர்களில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீஸர் என்ற சாதனையை ‘புஷ்பா’ டீஸர் படைத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in