தெலங்கானாவில் விளம்பர சர்ச்சை- நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போக்குவரத்து கழகம் நோட்டீஸ்

தெலங்கானாவில் விளம்பர சர்ச்சை- நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போக்குவரத்து கழகம் நோட்டீஸ்
Updated on
1 min read

நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகனும், நடிகருமான அல்லு அர்ஜுன், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அல்லு அர்ஜுன், ஒரு விளம்பர படத்தில் நடித்தார். இதுகுறித்து தெலங்கானா அரசு பஸ் போக்குவரத்து கழக ஆணையர் சஜ்ஜனார் சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நடிகை, நடிகர்கள் மற்றவர்களை விட சமூக பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். அப்படி இருக்கையில், பஸ் போக்குவரத்தை குறைத்து பேசி வரும் விளம்பரத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார். மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்தும், பல தொழிலாளர்களின் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பஸ் போக்கு வரத்தை குறைத்து மதிப்பிட்டு பேசும்படியான விளம்பரம் தேவையா?

குடிநீர், சோடா போன்றவற்றை காட்டி நடிக்கும் நடிகர்கள் அதற்கு பின்னால் எதனை இவர்கள் குடிக்க சொல்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக புரியும். கண்டிப்பாக இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்" என்றார். மேலும், அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in