நடிகர் கலாபவன் மணி மரணம்: கமல்ஹாசன் இரங்கல்

நடிகர் கலாபவன் மணி மரணம்: கமல்ஹாசன் இரங்கல்

Published on

தென்னிந்திய நடிகர் கலாபவன் மணி மரணமடைந்ததையடுத்து நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

45 வயதான கலாபவன் மணி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகள் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

அவரது மரணத்திற்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது நண்பர் கலாபவன் மணியின் இறப்பு எனக்கு வருத்தமளிக்கிறது. என்னுடைய மலையாள சகோதரர்களில் மேலும் ஒருவர் கல்லீரல் நோயால் இறந்துள்ளார். காலத்தை விடவும் அதிக திறமை படைத்தவர் கலாபவன் மணி” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in