துக்கத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது - புனித் ராஜ்குமார் மறைவுக்கு அமிதாப் பச்சன் இரங்கல்

துக்கத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது - புனித் ராஜ்குமார் மறைவுக்கு அமிதாப் பச்சன் இரங்கல்
Updated on
1 min read

நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில் புனித் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 3 மணியளவில் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

புனித் ராஜுகுமாரின் மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காலையிலிருந்து இரண்டு நெருங்கிய நண்பர்களின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட துக்கத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

அதில் ஒன்று மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி...

நடிகரும் கன்னட சினிமாவின் ஆளுமையாக திகழ்ந்த ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் மறைந்து விட்டார். இது நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

மறைந்த ராஜ்குமாரின் குடும்பத்தினர் எப்போதும் எங்களுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். அவர்களுக்கு எனது பிரார்த்தனைகளும், அனுதாபங்களும்..

இவ்வாறு அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in