Published : 20 Oct 2021 05:15 PM
Last Updated : 20 Oct 2021 05:15 PM

'ஷ்யாம் சிங்கா ராய்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஹைதராபாத்

நானி நடித்துள்ள 'ஷ்யாம் சிங்கா ராய்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஷ்யாம் சிங்கா ராய்'. நிஹாரிகா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சானு ஜான் வர்கீஸ், இசையமைப்பாளராக மிக்கி ஜே.மேயர் உள்ளிட்ட பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு டிசம்பர் 24-ம் தேதி 'ஷ்யாம் சிங்கா ராய்' வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் படத்தின் டீஸர், பாடல்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'ஷ்யாம் சிங்கா ராய்' வெளியாகவுள்ளது.

முன்னதாக நானி நடிப்பில் உருவான 'வி' மற்றும் 'டக் ஜெகதீஷ்' ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன. கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு நானி நடித்து திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக 'ஷ்யாம் சிங்கா ராய்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x