சட்டையில்லாத உடலைக் காட்டும் ஆண் நடிகர்களை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? - கோட்டா சீனிவாசராவுக்கு நடிகை அனசுயா பதிலடி

சட்டையில்லாத உடலைக் காட்டும் ஆண் நடிகர்களை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? - கோட்டா சீனிவாசராவுக்கு நடிகை அனசுயா பதிலடி
Updated on
1 min read

தனது ஆடை குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த மூத்த நடிகர் கோட்டா சீனிவாசராவுக்கு நடிகை அனசுயா பரத்வாஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். தமிழிலும் கூட ‘சாமி’, ‘திருப்பாச்சி’, ‘சகுனி’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தற்போதைய காமெடி நிகழ்ச்சிகள் ஒரு சர்க்கஸ் போல இருப்பதாகவும், பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினியும், நடிகையுமான அனசுயா பரத்வாஜைக் குறிப்பிட்டு அவர் மிகவும் திறமையான நடிகை எனவும், ஆனால் அவர் ஆடை அணியும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.

கோட்டா சீனிவாசராவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. பலரும் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோட்டா சீனிவாசராவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை அனசுயா பரத்வாஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''மூத்த கலைஞர் ஒருவர் கூறிய சில கருத்துகளை இப்போதுதான் பார்த்தேன். நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது கவலைக்குரிய விஷயமாக இருப்பது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. அனுபவம் வாய்ந்த ஒருவர் மிகக் கீழ்மையான முறையில் கருத்து தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆடை என்பது முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு தொழில்முறைத் தேர்வாகவும் இருக்கலாம். ஆனாலும், தனிப்பட்ட விஷயம்தான்.

இன்றைய சமூக ஊடகங்கள் இத்தகைய பயனற்ற விஷயத்தை எப்படி முன்னிலைப்படுத்துகின்றன என்பதே முரணாக உள்ளது. அந்த மூத்த நடிகர் திரையில் மது அருந்துவதையோ அல்லது மோசமான ஆடைகளை அணிவதையோ அல்லது பெண்களைத் தவறாக நடத்துவதையோ அல்லது அவமானப்படுத்துவதையோ அவர்கள் புகழ்வார்களா? அதிசயம்தான்.

என்னைப் போன்ற ஒரு திருமணமான பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் தாய் இன்னும் வேலை செய்கிறார். ஆணாதிக்க நெறிமுறைகளைக் கேள்வி கேட்கும், உங்களை அச்சுறுத்தும் கருத்துடைய தனது தொழிலில் வெற்றி பெற முயல்கிறார். பின்னர் நீங்கள் பொதுவில் கருத்துகளைச் சொல்வதை விட நீங்களே சமாளிக்க வேண்டும்.

திருமணமாகி, குழந்தைகள் பெற்றும் நடிகைகளுடன் திரையில் காதல் செய்து, சட்டையில்லாத தனது உடலமைப்பைக் காட்டும் இந்த நட்சத்திரங்கள் அனைவரையும் ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?''.

இவ்வாறு அனசுயா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in