

தமிழில் சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘வேதாளம்’ திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து, அதில் சிரஞ்சீவி நடிக்கும் தகவல் கடந்த ஆண்டேவெளிவந்தது. மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கஉள்ளது. ‘வேதாளம்’ படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். அந்தகதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
முதலில் இதற்கு சாய் பல்லவியிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தினர். 50 நாட்களுக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியாமல் சாய் பல்லவி விலகிய பிறகு, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கான பணிகளை படக் குழுவினர் தற்போது முழு வேகத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.